ஜூன் 30 வரை தடை நீட்டித்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!! கண்டிப்புடன் நடந்து கொள்ள அதிகாரிகளுக்கு ஆணை..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 25, 2020, 5:32 PM IST
Highlights

இந்நிலையில் நாட்டில்  பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் கொரனாவை கட்டுப்படுத்த பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் , உத்தர பிரதேச மாநில முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . 

ஜூன் 30ஆம் தேதி வரை உத்திரப்பிரதேசத்தில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் இன்று காலை தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 11 குழுக்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதற்கு  பின்னர் அவர்  இதனை அறிவித்துள்ளார்,  கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில்  இந்தியாவில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தம் 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான  உத்தரப் பிரதேசத்தில் 1, 600 க்கும் மேற்பட்டிருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரை 25க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர் ,  இந்நிலையில் கொரோனாவை  கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது ,  ஆனாலும் இது வரையில் கொரோனாவை  கட்டுப்படுத்த முடியவில்லை , இந்நிலையில் நாட்டில்  பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் கொரனாவை கட்டுப்படுத்த பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் , உத்தர பிரதேச மாநில முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதாவது குருணை வைரஸை கண்காணிக்கும் அம்மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள  பதினொரு குழுக்களின் தலைவர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார் அதன்பிறகு அறிவிப்பு வெளியிட்ட அவர் , வரும் ஜூன் 30ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் பொதுக்கூட்டங்களில் அனுமதிக்கப்படாது என்றும் மக்கள் ஒன்று கூடவோ அல்லது  அதில் அரசியல் பேரணிகள் மற்றும் சமூக செயல்பாடுகள் போன்ற பெரிய கூட்டங்களை நடத்தவோ கூடாது என  அவர் உத்தரவிட்டுள்ளார் .  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 30 வரை மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுக்க வேண்டும், அதில் அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்  என மாநில அதிகாரிகளுக்கும் அவர் கடுமையாக  உத்தரவிட்டுள்ளார் அரசு எடுக்கும் இந்த முடிவுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .  அதுமட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் மாநிலத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . 

click me!