காங்கிரசில் இருந்து 'பல்டி' அடிக்கும் தலைவர்கள்.. தள்ளாடும் காங்கிரஸ்.. அப்போ உபியில் தோல்விதான்..

By Raghupati RFirst Published Jan 29, 2022, 2:07 PM IST
Highlights

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி  10இல் தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதில் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 2017இல் பெற்றதைப் போல மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. 

எனினும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபி தேர்தலை நாடே எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்கள் பிரச்சாரங்களை பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.காரணம் கொரோனா பரவல் தான்.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது இப்படியிருக்க காங்கிரசில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால், நமக்கே தலை சுற்றிவிடும் போல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறைந்தது 10 முக்கிய முகங்களாவது காங்கிரஸில் இருந்து வெளியேறியுள்ளனர், அவர்களில் பலர் கட்சியில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகித்துள்ளனர். 

உதாரணமாக, ஆர்பிஎன் சிங், கட்சியின் நட்சத்திரப் பிரச்சார பேச்சாளர்களின் பட்டியலில் இருந்தார். காங்கிரஸின் இளம் மற்றும் மிக முக்கியமான முஸ்லீம் முகமான இம்ரான் மசூத் ஆவார்.அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் பல்டி அடிப்பது, காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!