தமிழில் பேசவே கூடாது.. இந்தி, ஆங்கிலம் மட்டும் தான் பேசணும்... தமிழகத்தில் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2019, 1:49 PM IST
Highlights

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே தமிழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 


இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே தமிழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணியமர்த்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இதுதொடர்பாக ஏராளமான அமைப்புகளும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரை அருகே ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிலைய மேலாளர் இடையிலான தகவல் பரிமாற்றத்தில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது. 

ஆனால் ஓட்டுநருக்கு தமிழ் தெரியாத காரணத்தால், பெரும் விபத்து நேரிட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எப்படியோ தவிர்க்கப்பட்டு விட்டது. இந்த சூழலில் தெற்கு ரயில்வே பரபரப்பான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, யில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர், ஸ்டேஷன் மாஸ்டர் இடையே உள்ள அலுவலக தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும். பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ரயில் நிலைய மேலாளர்கள் இடையே சரியான புரிதல் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அடாவடித்தனமானது. தமிழர்களின் உணர்சை சீண்டிப் பார்க்கும் வேலை. இதுபோன்ற சில்லரைத் தனமான முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார் 

click me!