புதிதாக உருவாகும் 12 மாவட்டங்கள்... நிர்வாக வசதிக்காக அதிரடி திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2019, 12:07 PM IST
Highlights

நிர்வாக வசதிக்காக மேலும் 12 மாவட்டங்களை பிரிக்கப்பட உள்ளதாக என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நிர்வாக வசதிக்காக மேலும் 12 மாவட்டங்களை பிரிக்கப்பட உள்ளதாக என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆந்திராவில் முதல்வராக பதவி ஏற்றது முதல் பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. 5 துணை முதல்வர் பதவியை இந்தியாவில் முதன் முறையாக ஆந்திராவிற்கு கொண்டு வந்தார். அடுத்து, தற்போது மாவட்டங்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார். 13 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திராவை 25 மாவட்டங்களாக பிரிக்க பணிகள் தொடங்கியுள்ளன. 

வருவாய், மேம்பாடு மற்றும் நிர்வாக வசதிக்காக 25 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். துணை முதல்வரும், வருவாய்த் துறை அமைச்சருமான பில்லி சுபாஷ் சந்திரபோஸ், “முதல்வர் ஜெகன்மோகன் ஒவ்வொரு திட்டத்தையும் சரியான முறையில் கையாண்டு வருகிறார். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாவட்டங்கள் பிரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். 

ஜெகன்மோகன் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாத யாத்திரையில் இருந்தார். அப்போது முதல்வராக நான் பதவியேற்றால் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அதற்கான பணியை தொடங்கிவிட்டனர்.

click me!