அமெரிக்க துணை அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளி கமலா ஹரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

By T BalamurukanFirst Published Aug 14, 2020, 10:13 AM IST
Highlights

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடவுள்ளார். துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார். இவருக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடவுள்ளார். துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார். இவருக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தங்கள் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ்  வேட்பாளராக அறிவிக்கவிருப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார். மேலும் இவர் அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

55 வயதான கமலா ஹாரிஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார் என்பதும், தற்போது கலிஃபோர்னியா மாகாண எம்.பி.யாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிஸ் ஒரு தைரியமான போராளி என்றும் நாட்டின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவர் எனவும் ஜோ பிடன் புகழாராம் சூட்டியுள்ளார்.


அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக தேர்வு பெற்றதை தான் பெருமையாக கருதுவதாக கமலா ஹாரிஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனிடையே கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்திருப்பது வியப்பளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. "அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை.. தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

click me!