தமிழகத்தில் தாமரை மலர வைக்க இதுதான் சரியான சான்ஸ்.. தனித்து போட்டியிட முடிவு செய்த பாஜக?

By vinoth kumarFirst Published Jan 31, 2022, 12:52 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன. அதிமுக கூட்டணியில் முக்கியமாக பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. 

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன. அதிமுக கூட்டணியில் முக்கியமாக பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிமுக - பாஜக இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 

இதனிடையே, பாஜகவின் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்றும் அதிமுக மக்கள் பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அதிமுக - பாஜக இடப்பங்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குக் கூட நயினார் நாகேந்திரன் செல்லவில்லை. இப்படி அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரம் நீட்டித்து. இருப்பினும், அதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திடீரென நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. அதேபோல், பாஜகவில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சியில் எழுந்தன.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 100 வார்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கமலாய வட்டார தகவல்கள் கூறப்படுகிறது. 

click me!