அமைச்சர் எ.வ.வேலு தேன் கூட்டில் கை வைத்துவிட்டார்.. வன்னியர் சங்க தலைவர் ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Jan 31, 2022, 11:44 AM IST
Highlights

கடந்த1989-ல், வன்னியர்கள் வாழும் இடத்தை அடையாளம் காட்டுகின்ற உயிர்நாடி சின்னமான அக்னி கலசத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, அக்னி கலசத்தை எடுத்துவிட்டு மீண்டும் வைத்து தருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வன்னியர்கள் பெருந்தன்மையாக சம்மதித்தார்கள். பின்னர், பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்னி கலசத்தை அகற்றியுள்ளனர்.

ஒரு வார காலத்திற்குள் அக்னி கலசத்தை மீண்டும், அதே இடத்தில் வைக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்க சங்கத் தலைவர் அருள்மொழி எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில், 1989ம் ஆண்டு பாமக  நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்னி கலசம் சிலை திறந்து வைத்து கொடியேற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளதால் வன்னியர் சங்க அக்னி கலசத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அக்னி கலசத்தை அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், நாயுடுமங்கலத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி பார்வையிட வருகை தந்திருந்தார். இதனால் எந்த அசாம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கடந்த1989-ல், வன்னியர்கள் வாழும் இடத்தை அடையாளம் காட்டுகின்ற உயிர்நாடி சின்னமான அக்னி கலசத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, அக்னி கலசத்தை எடுத்துவிட்டு மீண்டும் வைத்து தருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வன்னியர்கள் பெருந்தன்மையாக சம்மதித்தார்கள். பின்னர், பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்னி கலசத்தை அகற்றியுள்ளனர். இது ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையும் பிற்படுத்தும் செயலாக உள்ளது. 

இவர்களுக்கு பின்னால் இருந்து செய்ய வைத்தவர் அமைச்சர் எ.வ.வேலு தான் காரணம் என்றும், இதன் மூலம் தேன் கூட்டில் கல்லெறிந்து உள்ளனர். இனி நாங்கள் தேனீக்களாய் கொட்டுவோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம் என்றார். நாயுடுமங்கலம் பகுதியில் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் அக்னி கலசத்தை தமிழக அரசு மீண்டும் வைக்க வேண்டும். மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரது வழியில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அக்னி கலசத்தை மீண்டும், அதே இடத்தில் வைக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல், அக்னி கலசத்தை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். வன்னியர் களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இப்போது, அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக எதிரொலிக்கும். தனிப்பட்ட ஒரு ஜாதிக்கு கொடுக்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்பட வில்லை. ஆனால், வன்னியர்களுக்கு கொடுத்த இட ஒதிக்கீடு மற்றும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

click me!