மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் திடீர் மறைவு... அதிர்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள்..!

Published : Oct 08, 2020, 09:15 PM ISTUpdated : Oct 09, 2020, 08:16 AM IST
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் திடீர் மறைவு... அதிர்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள்..!

சுருக்கம்

லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) உடல் நலக் குறைவால் இன்று திடீரென காலமானார்.  

மத்திய உணவுத் துறை மற்றும்  நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து மூன்று தினங்களுக்கு முன்பு டெல்லி தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதயத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் இன்று அவருடைய உடலில் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவருடைய மகன் அறிவித்தார்.  
மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் 8 முறை எம்.பி.யாக இருந்தவர். விபிசிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மோடி ஆகியோர் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர்.  ராம்விலாஸ் பஸ்வானின் இந்தத் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய இரங்கலையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!