ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி... ஜால்ரா போட்டும் கண்டு கொள்ளாததால் செம காண்டில் ஓ.பி.எஸ். மகன்..!

By Thiraviaraj RM  |  First Published Mar 16, 2020, 4:14 PM IST

இருவருக்கு மத்திய அமைச்சர் பதவிகளைக் கொடுத்து, காங்கிரசை காலி செய்ய பாஜக திட்டம் போட்டிருக்கிறது.
 


இருவருக்கு மத்திய அமைச்சர் பதவிகளைக் கொடுத்து, காங்கிரசை காலி செய்ய பாஜக திட்டம் போட்டிருக்கிறது.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனும், காங்கிரஸில் இருந்து விலகி, பா.ஜ.கவில் சேர்ந்திருக்கற ஜோதிராதித்ய சிந்தியாவும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். இப்போது ஜி.கே.வாசனும், ஜோதிராதித்ய சிந்தியாவும் சேர்ந்தாற்போலவே ராஜ்யசபாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

இவர்கள் இருவருக்குமே மத்திய அமைச்சர் பதவிகளை கொடுக்க, பா.ஜ.க மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் காங்கிரசை பலவீனப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த, காங்கிரசின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதைவிட கவலையாக இருக்கிறது தேமுதிக, ஒ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் ஆகியோரின் நிலை. தேமுதிக தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க அதிமுகவுக்கு உத்தரவிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தது.

ஆனால், அதனை கண்டு கொள்ளாத பாஜக, ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுக்க அழுத்தம் கொடுத்தது. இது பிரேமலதாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதிலும் ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பது பிரேமலதாவை கொதிக்க வைத்துள்ளது. அடுத்து தமிழகத்தில் இருந்து மக்களவக்கு ஒரே ஆளாக அதிமுக கூட்டணியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற ஓ.பி.ஆருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல ஓ.பி.ஆர் பாஜக கட்சியை சார்ந்தவராக தன்னை பாவித்து வந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக உள்ளது ஓ.பி.ஆருக்கு அதிச்சி கொடுத்துள்ளது. இத்தனை நாட்களாக காத்திருந்த தமக்கு கிடைக்காமல், நமது கட்சி மூலம் ராஜ்யசபாவுக்குள் நுழையும் வாசனுக்கு கிடைக்கப்போவதை எண்ணி ஓ.பி.ஆர் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். 

click me!