அண்ணாமலை, எல்.முருகனுக்கு திடீர் அழைப்பு விடுத்த நிர்மலா சீதாராமன்- ஆலோசனைக்கான காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Dec 22, 2023, 1:19 PM IST

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக  அண்ணாமலை மற்றும் எல்.முருகனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். 
 


தமிழகத்தில் வெள்ள பாதிப்பு

தென் மாவட்டங்களில் தமிழகத்தில் பாஜகவால் இன்னும் முழுமையாக வெற்றியை பெற முடியாத நிலையில், வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல மாதங்களுக்கு முன்பே பல்வேறு திட்டங்களை மாவட்டம் தோறும் செயல்படுத்து வருகிறது. பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். 

Tap to resize

Latest Videos

நிர்மலா சீதாராமனோடு சந்திப்பு

இந்தநிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின் பேரில் இரண்டு பேரும் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதிகளில் கள நிலவரம் தொடர்பாக எடுத்துரைத்தாக கூறப்படுகிறது. மேலும் தென் மற்றும் வட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது மத்திய அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப்பணிகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.  

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,  தமிழகத்தில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. "இவ்வளவு மழை பெய்யும் என யாரும் சரியாக கணித்து கூற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், வானிலை மையத்தை குற்றம் சாட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மழை எச்சரிக்கையின் அடிப்படையில் எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? எனவும் தமிழக அரசை கேள்வி கேட்டார். 

இதையும் படியுங்கள்

வெள்ள நிவாரணம் கோரி 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்... இன்று முதல் கணக்கெடுக்கும் பணி தொடங்கும்- தமிழக அரசு

click me!