மத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்... அதிமுகவில் மூவருக்கு வாய்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Nov 24, 2020, 6:16 PM IST
Highlights

 நிதீஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் அதிமுகவை இணைத்துக்கொள்ள பாஜக முன்வந்துள்ளது. 

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  

அதில் அதிமுகவிற்கு மூன்று அமைச்சர் பதவிகளை தருவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதில் யார் அமைச்சராக இடம் பெறப்போகிறார்கள் என்பது அதிமுகவில் ஒரு பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. அமித்ஷாவின் விசிட்டுக்கு பிறகு மத்திய அரசில் ஏற்பட்ட மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. பாஜக அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் இடம்பெறவுள்ளது.

 பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. நிதீஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் அதிமுகவை இணைத்துக்கொள்ள பாஜக முன்வந்துள்ளது. சென்றமுறையே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கவில்லை.

 

ஆகையால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு நிச்சயம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் இவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவும், அமித்ஷ தனியாக 7 பேர் கொண்ட குழுவையும் அமைக்க இருக்கிறார். இந்த குழு அதிமுக -பாஜக இடையே கட்சி தகவல்கள் பரிமாறுதல், தேர்தல் வியூகங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் அமைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

click me!