படையெடுக்கும் பாஜகவினர்.. ஆளுநர் சந்திப்பின் பின்னணி..? அடுத்தகட்ட நகர்வில் ஆளும் தரப்பு..?

By Thanalakshmi VFirst Published Jan 9, 2022, 3:18 PM IST
Highlights

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
 

இரு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் பஞ்சாப் சென்றபோது, அவருக்கு போதிய பாதுகாப்பை அந்த அரசு வழங்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆளுநரிடம் கடிதம் ஒன்றை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கொடுத்தார். அதைத்தொடர்ந்து முருகனும் இன்று ஆளுநரை சந்தித்திருக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், தமிழகத்தின் மத்திய பிரதிநிதியாக முருகன் இருப்பதால் நீட் விவகாரம் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்த நீட் தேர்வுக்கான திருத்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார் இந்த நிலையில் எல்.முருகன் ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் , நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்ட்ப்பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளது. நீட் விலக்கு குறித்து தமிழக ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர்யை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். 

click me!