வேல் யாத்திரைக்கு தடை போட்ட எடப்பாடி அரசு.. கடுப்பில் தமிழகம் வரும் அமித்ஷா.. குஷியில் பாஜகவினர்..!

Published : Nov 15, 2020, 01:54 PM IST
வேல் யாத்திரைக்கு தடை போட்ட எடப்பாடி அரசு.. கடுப்பில் தமிழகம் வரும் அமித்ஷா.. குஷியில் பாஜகவினர்..!

சுருக்கம்

பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நவம்பர் 21-ம் தேதி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நவம்பர் 21-ம் தேதி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றி வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தமிழக அரசு கொரோனா காரணம் காட்டி அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நவம்பர் 21-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் அவர் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனுமதியின்றி தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல், இந்த வேல்யாத்திரையில் அமித் ஷா பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..