தடுப்பூசி இருப்பு இல்லை.. மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை.. சீறும் சிதம்பரம்..!

Published : Jun 09, 2021, 11:02 AM IST
தடுப்பூசி இருப்பு இல்லை.. மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை காணவில்லை.. சீறும் சிதம்பரம்..!

சுருக்கம்

மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்ளைகள்தான் இந்நிலைக்கு முழு காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை! தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மசூதி இடிப்பு..? பாகிஸ்தானுடன் கைகோர்த்த இண்டியா கூட்டணி.. பாஜக ஆத்திரம்..!
அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் பாஜக..? இபிஎஸ் இல்லத்தில் நயினார் ஆலோசனை..