சென்னையில் கொரோனாவை அடியோடு அழிக்க பயங்க பிளான்.. நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வு..

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2021, 10:54 AM IST
Highlights

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும்  குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும்  குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரமாக குறைந்துள்ளது. 

இந்நிலையில், பொதுமக்களிடம் கொரோனோவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய Sero survey எனப்படும் குருதி சார் அளவீடு ஆய்வு தொடங்க சென்னை மாநகராட்சியின்  சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ICMR வழிகாட்டு நெறிமுறைகள் படி சென்னை மாநகராட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக SERO சர்வே சென்னையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையொட்டி, தற்போது ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஆய்வின்படி  எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கண்டறிந்து நோய்த்தொற்று  தடுப்புப் பணிகளை அங்கு தீவிரப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் சுழற்சி முறையில் இந்த பரிசோதனை மேற்கொள்ள பரிசோதனை குழுக்கள் அமைத்து வரும் வாரத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

click me!