ஐயோ ஆண்டவா இது எங்கபோய் முடியுமோ... மூன்றாவது அலையில் காத்திருக்கும் கொடூரம்.. மக்களே இதோ ஆதாரம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2021, 10:36 AM IST
Highlights

சென்னையில் மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் கொரோனாவால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் கொரோனாவால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் நிலையில், சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயது வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மே மாதத்தில் 6.2% ஆக இருந்த பாதிப்பு தற்போது 9.1% ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், 0-9 வயதினர் பொருத்தவரையில் மே மாதத்தில் 2.3% ஆக இருந்த பாதிப்பு ஜூன் மாதத்தில் 2.5% ஆகவும், 40 முதல் 49 வயதுடையவர்கள் மே மாதத்தில் 17.8% ஆக இருந்த பாதிப்பு ஜூன் மாதத்தில் 17.9% ஆகவும், 70 முதல் 79 வயதுடையவர்கள் மே மாதத்தில் 5% ஆக இருந்த பாதிப்பு ஜூன் மாதத்தில் 5.9% ஆகவும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கடந்த மாதம் 2% ஆக இருந்த பாதிப்பு தற்போது 2.2% ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 முதல் 29 வரை உள்ள வயதினர் மே மாதத்தில் 19.1% ஆக இருந்த பாதிப்பு தற்போது 16.5% ஆகவும், 30 முதல் 39 வயதுடையவர்கள் கடந்த மாதம் 21.8% ஆக இருந்த பாதிப்பு தற்போது 21.3% ஆக உள்ளது. 

50 முதல் 59 வயதுடையவர்கள் கடந்த மாதம் 15% ஆக இருந்த பாதிப்பு 14.2% ஆகவும், 60 வயது முதல் 69 வயதுடையவர்கள் கடந்த மே மாதம் 10.4% ஆக இருந்த கொரோனா தொற்று பாதிப்பு ஜூன் மாதத்தில் 10.1 % ஆக குறைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிகளவில் தாக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இளைஞர்கள் கொரோனா தொற்றிற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!