சிறுமிகளை நாசமாக்கினால் கடும் தண்டனை... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

By Thiraviaraj RMFirst Published Jul 10, 2019, 6:40 PM IST
Highlights

சிறுமிகளுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 

சிறுமிகளுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையை தீர்க்கும் 1956- ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண "ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயத்தை" அமைக்கும் முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை அதிகபட்சமாக ஓராண்டிற்குள் தீர்வு காண திட்டம் வகுக்கப்படும். அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

போக்சோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறுமிகளுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கிராம் சகத் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சத்து 25 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 

click me!