சட்டத்தில் ஓட்டை விழுந்ததால் நாடாளுமன்றம் செல்கிறார் வைகோ..? நீதிமன்றத்தை விமர்சித்த எச். ராஜா..!

By vinoth kumarFirst Published Jul 10, 2019, 6:06 PM IST
Highlights

மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது சட்டத்தில் ஓட்டை இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
 

மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது சட்டத்தில் ஓட்டை இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், 2009-ம் ஆண்டு திமுக. அரசால் தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்ற வைகோ தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரது மனுவை ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா. சட்டத்தில் ஓட்டை

— H Raja (@HRajaBJP)

 

இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா. சட்டத்தில் ஓட்டை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

click me!