அடாத மழையில் இடையறாத காவல் பணி.. மரம் விழுந்து மாண்டுபோன போலீஸ் கவிதா.. முதல்வர் 10 லட்சம் நிவாரணம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 11:48 AM IST
Highlights

இந்நிலையில் இந்த தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்ததுடன், அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதா குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழு அரசு அறிவித்துள்ளது. மரம் விழுந்து உயிரிழந்த காவலர் கவிதாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இழப்பீடு அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டா என்கிற கவிதா வயது (41) இவர்  2005ஆம் ஆண்டு பேட்ச் காவலர் ஆவார். தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக இன்று தலைமைச் செயலகம் வந்த இவர் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதையும் படியுங்கள்: சென்னை தலைமை செயலகத்தில் பயங்கரம்.. மரம் விழுந்து பெண் காவலர் துடி துடித்து உயிரிழப்பு.. காவலர்கள் அதிர்ச்சி.

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவரமடைந்துள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வந்தது.இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாலை முதலே பிரதான சாலைகளில் போக்கு வரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். மழையையும் பொருட் படுத்தாமல் சாலைகளில் போக்குவரத்து ஓழுங்கு செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வந்தனர். அதிகாலையில் சென்னையில் பல்வேறு பகுதியிகளில் மிதமான மழை பெய்து வந்தது, அப்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் காவலர் கவிதா போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். தொடர் மழையின் காரணமாக 75 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் இன்று காலை 9.10 மணி அளவுக்கு அடியோடு சாய்ந்து விழுந்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து காவலர் கவிதாவின் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதைக்கண்ட அருகிலிருந்த போலீசார் செய்வதறியாது அலறினர். உடனே கவிதாவை மீட்க முயற்சித்தனர், ஆனால் அவர்களால் மீடுக முடியவில்லை, அதனை அடுத்து உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  ஜேசிபி எந்திரம் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களின் உதவியுடன் பிரமாண்ட மரம் வெட்டி துண்டிக்கப்பட்டது, பின்னர் மரத்துக்கு அடியில் சிக்கியிருந்த பெண் காவலரின் உடல் பத்திரமாக மீட்கப்பட்டது. பெண் காவலர் மீது மரம் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்ன ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர், இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தலைமைச்செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதையும் படியுங்கள்:  3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்ததுடன், அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காலையிலேயே ஆரவாரமாக போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கவிதா மீது மரம் விழுந்து அவர் உயிரிழந்துள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 23 வயதான அருண்குமார் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். 18 வயதான அவரது மகள் சினேகா பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். மேலும் இளைய மகன் விஷால் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!