நான்கில் ஒருவர் வேலையிழப்பு..!! தொடர் ஊரடங்கால் ஏற்பட்ட அவலம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 7, 2020, 4:10 PM IST
Highlights

கொரோனாவால் பொருளாதாரத்தின் பல முக்கியமான துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலையில்லா நெருக்கடியை நாடு எதிர்கொள்கிறது .

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் 4 பேரில்  ஒருவர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது ,  குறிப்பாக இந்தியாவில்  தற்போது அந்த வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது ,  கடந்த ஒரு சில நாட்களாக வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் ,  இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 45 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை 1,287 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரை சுமார் 15 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . 35, 927 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆனால் இதுவரையில் ஒருவர்கூட ஐசியூவில் இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட இது இரண்டு மாத காலமாகும் . பொதுப்போக்குவரத்து, தொழிற்சாலைகள், அத்தியாவசிய பணிகள் என அனைத்தும் முடங்கியுள்ளதால்  நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும்  வேலைக்கு இழப்புக்களையும் சந்தித்து வருகிறது ,  அதாவது கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாக நாட்டின் பொருளாதார நிலையை கண்காணிக்கும் சிஎம்இஐ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது .  இதுதொடர்பாக  அந்த அமைப்பு வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் , கொரோனாவால் பொருளாதாரத்தின் பல முக்கியமான துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலையில்லா நெருக்கடியை நாடு எதிர்கொள்கிறது

 

முறைசார் மற்றும் முறைசாரா துறை ஊழியர்களை கொரோனா ஒட்டுமொத்தமாக மூழ்கடித்து மிக அதிகமான மக்களை வறுமையில் தள்ள அச்சுறுத்துகிறது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 23.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பாக பெரிய மாநிலங்களான தமிழ்நாடு ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் வேலையின்மை அதிகமாக உள்ளது சிறிய நடுத்தர மற்றும் மைக்ரோ நிறுவனங்கள் விடுதிகள் உணவகங்கள் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் சில்லறை விற்பனை மற்றும்  விமான நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் ஊடகங்கள் என மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன  என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது .  இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!