குஷ்புவை, கட்சியிலிருந்து நீக்கச் சொல்ல ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா..!! கழுவி ஊத்தும் கராத்தே தியாகராஜன்..

By Ezhilarasan BabuFirst Published May 7, 2020, 3:28 PM IST
Highlights

நடிகை குஷ்பு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பாக எடுத்து வருகிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

என்னை கட்சியில் இருந்து நீக்க நிர்பந்தித்தது போல திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படும் குஷ்பு மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை நீக்க நிர்பந்திப்பாரா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் .  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறது ,  ஆனால் சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து மனு கொடுத்து விட்டு வெளியே வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பாக எடுத்து வருகிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதேபோல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தவுடன் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கண்டித்தது , திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சிகள் சார்பாக மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிவதாக அண்ணன் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார் ,  ஆனால் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவராக வரவிருக்கிறார் என்று பேசப்படுகிற சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மதுவிலக்கு உலகளவில் தோல்வியடைந்துள்ளது ,  தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி இருக்கக்கூடாது ,  மதுக்கடைகள் தினமும் சில மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .

 

உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கருத்து கேட்டபோது நான் கருத்து சொன்னதை விரும்பாத அண்ணன் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்தி என்னை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குமாறு வற்புறுத்தினார்.  இதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியே சில பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியிருக்கிறார் ,  தற்போது திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரியும் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் போது ,  அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அவர்கள் தமிழக முதல்வர் கொரோனா நோய்த்தொற்று  பரவாமல் தடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார் .  மதுக் கடைகளை திறப்பதை கண்டித்து திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுக்கடைகள் திறக்க வேண்டும் என்கிறார்.

இப்படி கூட்டணி தர்மத்திற்கு எதிராக பேசிவரும் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின்   வற்புறுத்துவாரா.?  தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது போல் இவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி முகுல் வாஸ்னிக் கே.சி வேணுகோபால் ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்புவாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தென்சென்னை மாவட்ட செயலாளரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் . 

 

 

click me!