அரசியல் செய்ய முடியாமல்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்கு சேகரிக்கும் திருமா! ஒரு பிடி பிடித்த ராஜேஸ்வரி பிரியா

Published : Jan 21, 2023, 07:32 AM ISTUpdated : Jan 21, 2023, 07:40 AM IST
அரசியல் செய்ய முடியாமல்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்கு சேகரிக்கும் திருமா! ஒரு பிடி பிடித்த ராஜேஸ்வரி பிரியா

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் முடிவு அடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இதில் அசீம், விக்ரமன், மைனா, ஷிவின் ஆகிய 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம் என திருமாவளவனை ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் முடிவு அடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இதில் அசீம், விக்ரமன், மைனா, ஷிவின் ஆகிய 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் தலைவரே வாக்கு கேட்டு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க;- விக்ரமனுக்கு ஓட்டு கேட்டு களமிறங்கிய திருமாவளவன்... அப்போ பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா?

விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு, அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதோடு அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருவதாக ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தொல்.திருமாவளவன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்கு சேகரிப்பது வேடிக்கையாக உள்ளது. எத்தனயோ மக்கள் பணிகள் கிடப்பில் இருக்க தேவையற்ற கலாச்சார சீர்கேட்டிற்கு வித்திடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம். சூதாட்டமாக இருந்தாலும் எனது கட்சிகாரன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு சமமாகும்.

இதையும் படிங்க;- விக்ரமனுக்கு எதிராக பேசியதால் மிரட்டல் விடுத்த விசிகவினர்... ‘யாருக்கும் பயந்தவ நானில்ல’ கெத்து காட்டும் வனிதா

ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதனால் அரசியல் செய்ய முடியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய தொடங்கியது வேதனை. மண், மக்கள் என்றெல்லாம் பேசி மக்களை  ஏமாற்றுவதனை நிறுத்தி கொள்ளுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!