விடியா திமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்... முதல்வர் ஸ்டாலினை விளாசிய சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Jan 21, 2023, 6:49 AM IST
Highlights

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். காவல்நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

ஒன்றுமே தெரியாத, தெரிந்துகொள்ள முயற்சிக்காத பொம்மை முதல்வர் தான் ஸ்டாலின் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 

எம்.ஜி.ஆர் 106 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான சி.வி. சண்முகம்  பேசுகையில்;- மக்களை பற்றி விடியா திமுக அரசுக்கு அக்கறை இல்லை, கவலை இல்லை. எங்கு பார்த்தாலும் லஞ்சம், பணம்தான் ஸ்டாலின் அரசின் குறிக்கோள். ஓட்டு போட்ட மக்களுக்கு விடியா திமுக அரசு இதுவரை ஒன்றுமை செய்யவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை விடியா திமுக அரசு முடக்கி வருகிறது என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், விடியா திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கையிலும் திமுக அரசு மோசடி செய்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. 2000 அம்மா மினி கிளினிக்குகளை மூடி விடியா திமுக அரசு சாதனை செய்துள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். காவல்நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் காவல்துறை ஏவல்துறையாக மாறியுள்ளது. தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. விடியா திமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். குறுகிய காலத்தில் மக்களின் கோபத்தை சம்பாதித்த அரசு விடியா திமுக அரசு. செயல்படாத அரசு விடியா அரசு. ஆட்சி செய்ய தெரியாத முதல்வர் ஸ்டாலின் என விமர்சனம் செய்துள்ளார். ஒன்றுமே தெரியாத, தெரிந்துகொள்ள முயற்சிக்காத பொம்மை முதல்வர் தான் ஸ்டாலின். திமுக குடும்ப கட்சி, தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என சி.வி. சண்முகம் கூறினார். 

click me!