டெல்லி கலவரத்தை கழுவி ஊற்றிய ஐநா மன்றம்...!! கையாலாகாத போலீஸ் என கேலி பேச்சு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 4:32 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள அரசால் கொண்டுவரப்பட்டுள்ள  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் டெல்லியில் கலவரத்தில் போலீசார் செயல்படாமல் இருந்தது போன்ற செயல்கள் வேதனையளிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் டெல்லி கலவரத்தில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிக்கிறது என ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார் ,  ஐநா சபையின் மனித உரிமை அமைப்பு 43வது  ஆலோசனை கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்றது அக்கூட்டத்தில்  ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர்   மீச்சேல்  பேச்லட் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது டெல்லி கலவரம்  குறித்து கருத்து தெரிவித்த அவர்,  டெல்லி போலீசாரின் செயல் கவலை அளிக்கிறது என்றார், தொடர்ந்து பேசிய அவர்,   இந்தியாவில் உள்ள அரசால் கொண்டுவரப்பட்டுள்ள  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் டெல்லியில் கலவரத்தில் போலீசார் செயல்படாமல் இருந்தது போன்ற செயல்கள் வேதனையளிக்கிறது. 

இச்சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் .  அவர்கள் இந்தியாவின் நீண்டகால மதச்சார்பற்ற பாரம்பரியத்தை ஆதரித்து வருகிறார்கள் .  டெல்லி கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்திய போதும் போலீசார் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள் இது மிகுந்த கண்டனத்திற்குரியது.  அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது  போலீசாரை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .  அதேபோல் காஷ்மீர் மாநிலத்தில்  இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை .  கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் இன்னும் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை . 

இன்னும்  காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .  படைகளை குறைப்பதற்கோ,  படையினரால் நடக்கும்  மனித உரிமைகள் மீறல்களை  தடுப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் இல்லை.  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காஷ்மீரில் இணைய தளம் , மொபைல் சேவைகள் ,  தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன .  உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது .  அங்குள்ள மக்கள் சமூக வலைதளங்களை கூட பயன்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
 

click me!