கலக்கத்தில் மோடி அமித்ஷா கூட்டணி...!! டெல்லி விஷயத்தில் நேரடியாக களத்தில் இறங்கும் ஐநா பொதுச் செயலாளர்...!!

Published : Feb 26, 2020, 05:20 PM IST
கலக்கத்தில் மோடி அமித்ஷா கூட்டணி...!! டெல்லி விஷயத்தில் நேரடியாக களத்தில் இறங்கும்  ஐநா பொதுச் செயலாளர்...!!

சுருக்கம்

ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும் .  பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும்

கலவர மேகம் சூழ்ந்துள்ள டெல்லியின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது .  இதில் வடக்கு கிழக்கு டெல்லியில் ,  மாஜ்பூர் , ஜபாராபாத் ,  சீலம்பூர் ,  சாந்த் பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது . 

 கடந்த இரண்டு நாட்களாக நடந்த மோதலில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவைகளை எல்லாம் வன்முறையாளர்களால் தீவைத்து கொளுத்தினர்  வன்முறையில் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள்  மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கலவரத்தால் சாலையில் மறிக்கப்பட்டது .  சுமார் 150 பேர் கலவரத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுவரையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது .   இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக  கொந்தளித்து வருகின்றனர். 

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் ,  டெல்லியின்  நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார் .  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநாவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது :-  ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும் .  பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் ,  இந்த கலவரம் தொடர்பாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ,  டெல்லியின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் . 
 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்