எத்தனை பிரஷாந்த் கிஷோர் வந்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவது துர்கா கையில்தான் இருக்கிறது... பகீர் விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 26, 2020, 5:16 PM IST
Highlights

2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க பிரசாந்த் கிஷோர் ஐடியா கொடுத்ததாக கூறப்படும் நிலையில் கூட்டணி இல்லாமல் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்காது என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க பிரசாந்த் கிஷோர் ஐடியா கொடுத்ததாக கூறப்படும் நிலையில் கூட்டணி இல்லாமல் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்காது என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அரசியல் எழுத்தாளர் மலரின் மகன் என்பவர் இதுகுறித்து, ’’திமுக கட்சிக்கு கட்டாயம் கூட்டணிக்கட்சிகள் தேவை. எவ்வளவு தலைகீழாக நின்றாலும் அதனால் தனித்து போட்டியிட முடியாது. எப்படியாவது கடைசியில் சில பல காட்சிகளை சேர்த்து கொண்டுதான் அவர்கள் தேர்தல் களம் காண்பார்கள். அப்படித்தான் கட்சியை வளர்த்திருக்கிறார்கள். மறைந்த கருணாநிதி கட்சிக்கென்று சில வழக்கங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

தலைவர் சொல்வதை கேட்டு கூட்டணி காட்சிகள் ஆதரவாக முதலில் பேசும் அதை வடித்து மக்கள் மனதை அறிந்து அதன் பிறகு அதற்கேற்ப மாற்றி கொள்வதற்கு கூட்டணிக்கட்சிகள் அவர்களுக்கு தேவை. அடுத்து மேடையில் பல கட்சியின் தலைவர்கள் இவர்களை புகழ்ந்து பேசுவதை கேட்டும், கண்டும் மனமகிழ்வு அடைவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். அதற்காகவும் தேவை. கூட்டமாக மேடையில் அனைவரும் அமர, அதில் இவர்கள் நடுநாயகமாக மிகவும் உயந்தவர்களாகவும் அரசரை போலவும் மகிழ்வுற்றிருக்க விரும்புவர். இது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அவர்களின் ஜாதகப்படி கூட்டணியிலேயே இருக்கவேண்டும் அதற்கு தலைமை தங்கவேண்டும் என்று அசாத்திய நம்பிக்கை.

 

மெகா கூட்டணி என்று வைத்து கொண்டால் தான் வெற்றி என்றும், அப்படி இல்லை என்றால் தொண்டர்களை விட தலைவர் சோர்ந்து விடுவார் என்பது கிஷோருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஸ்டாலினுக்கு தெரிந்தே இருக்கும்.வெற்றி என்பதற்கு திருமதி துர்கா ஸ்டாலின் இன்னும் பல கோவில்களுக்கு செல்வதுட,ன் விரதமும் இருக்கவேண்டும்போல? வெறும் பேச்சுக்களாலும் ஏழைகள் வீட்டில் சென்று உணவு அருந்துவது ஆட்டோவில் செல்வது போன்றவற்றால் வெற்றி இருக்கும் திசையை நோக்கி காலடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதை காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் நிரூபித்திருக்கிறார். 

தேர்தலில் அதன் பிறகு வெற்றிக்கு எதிராளிகள் 27 சதவீத ஓட்டுக்களை தகர்க்க முடியுமா? என்று பார்க்கவேண்டும். அதைவிட எளிதாக நடுநிலையான இந்துக்களின் முப்பது சதவீத ஓட்டுக்களை பாதிக்கு மேல் பெறவேண்டும். அது இயலாததாக தெரிகிறது. பெரும்பாலான மக்களுக்கு ஆதரவு என்ற நிலையையும் சிறுபான்மையினருக்கு எதிர்ப்பு இல்லை உதவி உண்டு என்று நிலைப்பாட்டை மாற்றவேண்டும்.எத்துணையோ எம் பிக்களை பெற்று கொண்டு அதிலும் இந்துக்களின் ஓட்டுக்களால் பெற்று கொண்டு இன்று அனைவரும் இந்துக்களுக்கு எதிரான கொள்கையை எடுப்பது என்பது பச்சை துரோகமில்லையா? மக்களின் பிரதிநிதியாகத்தானே இவர்கள் செயல்படவேண்டும். அதைவிடுத்து சிறுபான்மையினரின் உதவியாளர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கொள்வது தவறு.

தளபதி புரிந்து கொள்ளவேண்டும். இல்லையேல் தோல்வியில் இருவருக்கும் நஷ்டமிருக்கும். கிஷோரின் வியூகம் எடுபடவில்லை. இது வரை கிடைத்த வெற்றிகள் காக்கை உட்கார பனம்பழம் என்ற வகை என்றாகிவிடும்’’எனத் தெரிவித்துள்ளார்.

click me!