மற்றவங்க நம்மைப் பற்றி பேசுவது கேட்க எனக்கு அப்படி இருக்கு...!! கல்யாண வீட்டில் பொங்கி ஊத்திய பன்னீர்..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2020, 4:05 PM IST
Highlights

அவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார் .

அதிமுக ஆட்சியின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசிவருவது பெருமை அளிக்கிறது என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை ஜெயலலிதாவின் ஆசியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார் .  தஞ்சையில் திருமண விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:-  ஜெயலிதாவின் ஆசியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது . 

தமிழகத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தஞ்சை தரணி , இது  புண்ணியபூமி ,  கடந்த  2007 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது ,  காவிரி நதிநீர்  பங்கீட்டில்  உள்ள  பிரச்சனைகளை சரி  செய்ய ஜெயலலிதா எவ்வளவு வலியுறுத்தினார்.  ஆனால் திமுகவும் காங்கிரசும் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை .  பின்னர் நீண்ட நெடிய விசாரணையின் முடிவில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது .   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக கருதுவது காவிரி நடுவர் இறுதித்  தீர்ப்பு அரசாணையை பெற்றுத்தந்தது என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் . 

ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறதாமே என விவசாயிகள் அச்சமடைந்தனர்.   அவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார் .  அதேபோல அதிமுக ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் பன்னீர் செல்வம் பேசினார். 
 

click me!