அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

Published : May 01, 2022, 08:39 AM IST
அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சின்னம்மாவை பின்பற்றிய நிலையில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பத்தை ஏற்று அமமுகவில் மாவட்ட செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மண்டல பொறுப்பாளர் போன்ற பதவிகளில் பணியாற்றிய எனது மனம் புண்படும்படி நடந்து கொண்டதால்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர்களில் ஒருவருமான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர் உமாதேவன் அக்கட்சியில் இருந்து திடீரென விலகிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2001-ல் திருப்புத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக  உமாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின் கழக அமைப்புச் செயலாளர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர், தினகரன் அமமுகவை தொடங்கிய போது அதில் இணைந்த உமாதேவன், அக்கட்சியில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மண்டல பொறுப்பாளர் பதவிகளை வகித்தார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் உமாதேவன் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.  

இதுதொடர்பாக உமாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சின்னம்மாவை பின்பற்றிய நிலையில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பத்தை ஏற்று அமமுகவில் மாவட்ட செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மண்டல பொறுப்பாளர் போன்ற பதவிகளில் பணியாற்றிய எனது மனம் புண்படும்படி நடந்து கொண்டதால் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த இயக்கமான அதிமுகவை மீட்டெடுக்கும் எண்ணமில்லாமல் அமமுகவை முன்னிறுத்துவதால் தினகரன் நடந்து கொள்வதால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா அவர்கள் எண்ணத்தில் விட்டு சென்ற இயக்கத்தை இமை போல் என் உயிர் உள்ள வரை காக்கப் பாடுபடுவேன். நான் மதுரை மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலங்களில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த மாவட்டசெயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் விசுவாசிகள் அனைருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று திருப்பத்தூர் உமாதேவன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!