சொல்லி அடித்த அண்ணாமலை...! 59 மாவட்ட தலைவர்கள் அதிரடி மாற்றம்.... அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்...

Published : May 01, 2022, 07:23 AM ISTUpdated : May 01, 2022, 07:25 AM IST
சொல்லி அடித்த அண்ணாமலை...! 59  மாவட்ட தலைவர்கள் அதிரடி மாற்றம்.... அதிர்ச்சியில் மூத்த தலைவர்கள்...

சுருக்கம்

மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்

 மக்களவை தேர்தல் இலக்கு

மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததுள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய பாஜக தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. எனவே  தேர்தல் பணியில் தீவிரம் காட்டும்படி மாநில தலைமைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, அடுத்தபடியாக பாஜக அதிக வாக்குகளை தமிழகத்தில் பெற்றது. இதனால் உற்சாகத்தில் உள்ள பாஜக அடுத்த இலக்காக நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை  கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகளை துவக்கும்படி ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார். மேலும் கட்சி பணிகளை தீவிரம் காட்டாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்து  இருந்தார்.

 

புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

இந்தநிலையில் மாவட்ட தலைவர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு 59 மாவட்டத்திற்கு புதிய தலைவர்களும், செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தர்மராஜ், தூத்துக்குடி தெற்கு சித்ராங்கதன்,தூத்துக்குடி வடக்கு வெங்கடேசன்,திருநெல்வேலி தயாசங்கர், தென்காசி ராஜேஸ் ராஜா, ராமநாதபுரம் கதிரவன், சிவகங்கை-மேப்பல் சத்தியநாதன்,புதுக்கோட்டை செல்வம் அழகப்பன், விருதுநகர் கிழக்கு-பாண்டுரங்கன், விருதுநகர் மேற்கு- சுரேஷ்குமார், மதுரை நகர் - சரவணன், மதுரை புறநகர் மகா சுசீந்திரன், திண்டுக்கல் கிழக்கு தனபாலன்,திண்டுக்கல் மேற்கு கனகராஜ், தேனி- பாண்டியன் திருச்சி நகர் ராஜசேகரன், திருச்சி புறநகர்-அஞ்சாநெஞ்சன், கரூர்-செந்தில்நாதன், பெரம்பலூர் செல்வராஜ், அரியலூர் ஐயப்பன் உள்ளிட்ட 59  மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல மாநில செயற்குழு உறுப்பினர்களும் நியமித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

 

 

செயற்குழு உறுப்பினர்களும் நியமனம்

கட்சியில் தீவிரமாக பணியாற்றாத மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என கூறியிருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டிருந்தனர்.  தாங்கள் கூறிய மாவட்ட தலைவர்கள் தான் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்தவர்களுக்கு மாநில செயற்குழு பதவி வழங்கப்பட்டுள்ளது. விரையில் மாநில நிர்வாகிகள் மாற்றப்பட்டு பட்டியல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!