மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாரும் தூங்க முடியாது. அதிலும் நகர் பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. புழுக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவிடுவர்.
ஜெயலலிதா அவருக்கு கொடுத்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடிப்படையில் அவருக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மின்வெட்டு
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாரும் தூங்க முடியாது. அதிலும் நகர் பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. புழுக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவிடுவர்.
நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாகத்தான் மின்தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து, தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது வாடிக்கை. இளங்கோவன் ஏற்கெனவே சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தார்.
சிறப்பாக செயல்பட்ட இளங்கோவன்
அதேபோல் ஜெயலலிதா அவருக்கு கொடுத்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடிப்படையில் அவருக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.