முதல்வர் அறையில் மயங்கி விழுந்த உடுமலை ராதாகிருஷ்ணன் !! 108 ஆம்புலன்சில் விரைவு …

By Selvanayagam PFirst Published Feb 19, 2019, 7:41 PM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் என மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார்.

வரும் ஏபரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக இடையே இன்று  கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அதிமுக – பாஜக இடையே ஒப்பந்தம்  ஏற்பட்டது, பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

முன்னதாக இன்று காலை  ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில்  அதிமுக – பாமக இடையே தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் முழுவதிலும்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்நிலையில்எ  முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி அறையில் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார்.

 

இதையடுத்து அவசர அவசரமான ஆம்புலன்ஸ்  வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

click me!