"தெரியாம சொல்லிட்டேன், மன்னிச்சுடுங்க.." கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி.. இதுதான் காரணமா ?

By Raghupati R  |  First Published Mar 21, 2022, 8:39 AM IST

கோவை நேரு நகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக சார்பில்  நலத்திட் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


கோவையில் உதயநிதி ஸ்டாலின் :

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 524 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் என ரூ.52,40,000 மற்றும் 500 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார். 

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, 'கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு, 'கோவை மக்களை நம்ப முடியாது. குசும்பு பிடித்தவர்கள் என்று கூறிச் சென்றேன். அதை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவை வருவேன் என்று கூறினேன் அதேபோல் தற்போது வந்துள்ளேன். இந்த வெற்றியை பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொன்னதை செய்த செந்தில் பாலாஜி : 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியில், மொத்தம் 100 வார்டுகளில், 96 இடங்களில் தி.மு.க., மற்றும் தோழமைக் கட்சிகளை கோவை மக்கள் வெற்றிபெறச் செய்தனர். அதேபோல், ஏழு நகராட்சிகளிலும் தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளை, வெற்றிபெறச் செய்துள்ளனர்.

சொன்னதை போலவே செந்தில் பாலாஜி செய்து காட்டியுள்ளார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல; முதல்வரின் எட்டு மாத கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக, 200 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

click me!