பயங்கரவாதத்தைத் தூண்டும் தவ்ஹீத் ஜமாத்அத்தை தடை செய்யாவிட்டால்.. திமுக அரசுக்கு பாஜக எச்சரிக்கை!

Published : Mar 21, 2022, 06:05 AM IST
பயங்கரவாதத்தைத் தூண்டும் தவ்ஹீத் ஜமாத்அத்தை தடை செய்யாவிட்டால்.. திமுக அரசுக்கு பாஜக எச்சரிக்கை!

சுருக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய தெளஃபீக் என்பவர் 'ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளை இழுத்து போட்டு வெட்ட வேண்டும்" என்றும் "அந்த நீதிபதிகளை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது” என்றும் “அந்த நீதிபதிகளை விளக்குமாற்றால் அடிக்க வேண்டும்'. 

'நீதிபதிகளை கொலை செய்வோம்' என்று மிரட்டியவர்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, தமிழகத்தில்  பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எச்சரிக்கை! மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்துள்ள நிலையில்.

ராமநாதபுரம் திருவாடானையில் 18/03/2022 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய தெளஃபீக் என்பவர் 'ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளை இழுத்து போட்டு வெட்ட வேண்டும்" என்றும் "அந்த நீதிபதிகளை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று என் கனவில் வந்தது” என்றும் “அந்த நீதிபதிகளை விளக்குமாற்றால் அடிக்க வேண்டும்'. நாங்கள் இந்த நாட்டை நேசிக்க கூடியவர்கள் அல்லர். ஆஹிருத்தை தான் நேசிப்பவர்கள். சாவதற்கு துணிந்தவர்கள், நாங்கள் எங்கள் மனது சொல்வதை செயல்படுத்தினால் நாடு தாங்குமா?' என்றும் பேசியுள்ளதையும் அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் அதை ஆமோதிப்பதையும் பார்க்க, கேட்க முடிகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் கூடியிருந்த பொதுமக்களை கொலை செய்ய தூண்டும் விதத்தில் பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது அந்த இயக்கம். திட்டமிட்ட ரீதியில் தமிழகத்தில் சட்டஒழுங்கை சீர்குலைக்க, மதநல்லிணக்கத்தை குலைக்க, மதக்கலவரங்களை உருவாக்க, நீதிமன்றங்களின், நீதிபதிகளின் மாண்பை குறைத்து, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று பொதுவெளியில் பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தை நடத்த விட்டு வேடிக்கை பார்ப்பதும், பேசிய பின் கைது செய்வது போன்ற நாடகங்களை நடத்துவது  மிக ஆபத்தானது. 

இது தொடர்ந்தால், தமிழகத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும், மதநல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மத கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். 'வருமுன் காப்போம்' என்று முழங்கும் திமுக அரசு, 'வந்த பிறகு பார்ப்போம்' என்று அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது. இனியும், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் இயக்க கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல், 'நீதிபதிகளை கொலை செய்வோம்' என்று மிரட்டியவர்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, தமிழகத்தில்  பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதால் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். தவறினால், அந்த இயக்கத்தினால் ஏற்படும் கொடூர விளைவுகளுக்கு தமிழக அரசும், தமிழக காவல் துறையுமே பொறுப்பேற்க வேண்டும்.” என்று அறிக்கையில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?