துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை கையாளும் உதயநிதி.. ஒரே போடு போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

By vinoth kumarFirst Published Dec 29, 2022, 1:39 PM IST
Highlights

திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5,639 புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்,  2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.

எங்களைப் பொறுத்தவரை இன்றிலிருந்தே புத்தாண்டு தொடங்கிவிட்டது. அதற்கான பரிசுகள்தான் இந்த நலத்திட்ட உதவிகள் என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5,639 புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்,  2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- கடந்த கால ஆட்சியில் சீர்கெட்டு போய் இருந்த நிதிநிலையை சரிசெய்யும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அதில் முன்னேற்றத்தை முதல்வர் ஸ்டாலின்  கண்டு கொண்டு இருக்கிறார். கூடுதல் செலவினம் வந்தாலும் பரவாயில்லை மக்களின் உடைய மகிழ்ச்சி தான் என் வாழ்க்கையின் எழுச்சி என்று சொல்லி பொங்களுக்கு வழங்கும் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து இனிப்பான அறிவிப்பை அறிவித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக் கோட்டை திருச்சி தான் எனக் கூறினார். எங்களைப் பொறுத்தவரை இன்றிலிருந்தே புத்தாண்டு தொடங்கிவிட்டது. அதற்கான பரிசுகள்தான் இந்த நலத்திட்ட உதவிகள் என்றார். 

மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நம்முடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். நம்முடைய அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மட்டுமல்ல. சிறப்பு திட்ட செயலாகத்துறை அமைச்சரும் கூட. கிட்டத்தட்ட துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பைக் உதயநிதி ஸ்டாலின்கையாண்டு கொண்டு இருக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் அன்பில் மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!