கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்ட உதயநிதி..! அமைச்சர் பதவி கானல் நீரானதன் பின்னணி..!

Published : May 07, 2021, 10:29 AM IST
கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்ட உதயநிதி..! அமைச்சர் பதவி கானல் நீரானதன் பின்னணி..!

சுருக்கம்

நேற்று முன்  தினம் இரவு வரை அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இருந்த நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை.

நேற்று முன்  தினம் இரவு வரை அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இருந்த நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெரு வெற்றி பெற்ற நிலையில் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதியை ஸ்டாலின் அறிவித்தார். அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமையப்போவது திமுக ஆட்சி தான் என்று பேச்சுகள் அடிபடத் தொடங்கியது முதலே உதயநிதி ஸ்டாலின் எந்த இலாகாவிற்கு அமைச்சராவார் என்கிற கேள்விகள் எழத் தொடங்கின. உதயநிதியும் கூட தனது தந்தையை போலவே உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ஏற்க ஆர்வத்துடன் இருந்ததாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி அமைச்சரவை பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உதயநிதி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது என்கிறார்கள். இதனை தொடர்ந்து இலாகா தொடர்பான பேச்சு வந்த போது உள்ளாட்சித்துறையை கே.என்.நேரு கேட்டிருக்கிறார். ஆனால் உதயநிதி அந்த இலாக்காவை விரும்பவுது கே.என்.நேருவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தலைவர் எந்த இலாகாவை கொடுத்தாலும் ஓகே என்று நேரு கூறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவிக்கு கே.என்.நேரு தான் சரியாக இருப்பார் என்று ஸ்டாலின் உறுதியுடன் இருந்ததாக சொல்கிறார்கள்.

இதனை அடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதியை நியமிக்க ஸ்டாலின் முடிவெடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் முக்கியத்துவம் இல்லாத அந்த அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வழங்குவதை துர்கா ஸ்டாலின் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த இலாகாவை தவிர வேறு எந்த இலாகாவை உதயநிதிக்கு ஒதுக்கினாலும் அது பொருத்தமாக இருக்காது, முதல் முறை எம்எல்ஏ, இளைஞர் என்கிற காரணங்களை சுட்டிக்காட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு தனது மகனை அமைச்சராக்க ஸ்டாலின் விரும்பியதாக கூறுகிறார்கள்.

ஆனால் அதில் துர்காவிற்கு விருப்பம் இல்லை என்று தெரிந்ததால் சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம்என்று உதயநிதியை அமைச்சரவை பட்டியலில் இருந்து ஸ்டாலின் நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஆட்சி அமைந்த பிறகு அமைச்சர்களின் செயல்பாடுகளை பொறுத்து இலாக்காக்கள் மாறும் என்று கூறுகிறார்கள். அப்போது உதயநிதிக்கு சரியான இலாகாவுடன் அமைச்சராக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக தரப்போ கொரோனா அச்சுறுத்தல் முடிந்த கையோடு உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறுகிறது.

அப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் போது தன்னைப்போலவே தனது மகனையும் சென்னை மேயராக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக மேலிடத்திற்கு நெருருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!