மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்... நெகிழ்ச்சி வீடியோ..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 07, 2021, 10:28 AM ISTUpdated : May 07, 2021, 10:31 AM IST
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்... நெகிழ்ச்சி வீடியோ..!

சுருக்கம்

முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று கூறி ஸ்டாலின் பதவியேற்ற போது அரங்கமே ஆராவாரத்தில் அதிர்ந்தது. 

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது, திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

 

 

பதவியேற்பு விழாவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், பேரன், பேத்திகள் உள்ளிட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். கலைஞரின் மருமகளாகவே இருந்தாலும் கடவுள் பற்று மிக்கவராகவே துர்கா ஸ்டாலின் வலம் வந்தார். அவர் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் பலவற்றிற்கும் சென்றும் வழிபாடு நடத்தும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாவது வழக்கம். 

 

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக துர்கா ஸ்டாலின் பல்வேறு கோயில்கள் பூஜைகள், யாகங்கள் நடத்தியுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாவது உண்டு. முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று கூறி ஸ்டாலின் பதவியேற்ற போது அரங்கமே ஆராவாரத்தில் அதிர்ந்தது. அப்போது மகிழ்ச்சி மிகுதியால் துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது கணவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கண் கலங்கிய துர்கா ஸ்டாலினின் புகைப்படங்கள், வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!