விஜயகாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த உதயநிதி... வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து வாழ்த்து பெற்றார்..!

Published : May 04, 2021, 02:44 PM ISTUpdated : May 04, 2021, 03:15 PM IST
விஜயகாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த உதயநிதி... வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து வாழ்த்து பெற்றார்..!

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். பின்னர், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி பிறகு அவருடைய உடல்நிலை குறித்து உதயநிதி கேட்டறிந்த பின் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது எல்.கே.சுதீஷ் உடனிருந்தார்.

அத்துடன் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கும், உதயநிதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!