கொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. பதவியேற்பதற்கு முன்னதாக 2வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனை.!

By vinoth kumarFirst Published May 4, 2021, 1:27 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனிடையே, மே மாதம் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுபாடுகளை நேற்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.  6-ம் தேதி முதல் கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள், நண்பகல் வரை மட்டுமே செய்படும் என அறிவித்துள்ளது. ரயில், மெட்ரோ, பேருந்துக்கள் 50% இருக்கையில் மட்டுமே அமர்ந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வருவாய்த்துறை, டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் 2வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை மறுநாள் புதிய கட்டுப்பாடுகள் அலுக்கு வரும் நிலையில் ஆலோசனை நடத்துகிறார். 

click me!