தமிழக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவியேற்பது தொடர்பாக நிச்சயமாக விமர்சனம் இருக்கும் அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் எனது செயல்பாடு இருக்கும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
உதயநிதியும் திமுகவும்
அதிமுகவிடம் 2011ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக சுமார் 8 வருடங்கள் எந்த வித தேர்தலிலும் வெற்றி பெறாமல் இருந்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு உதயநிதியின் பங்கு முக்கியமாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற 2021ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் சுமார் திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்கள் கடந்த பிறகு தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியது வாரிசு அரசியல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அனைத்து துறை அமைச்சர்களுக்கும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்,
நேரம், காலம் பார்த்து உதயநிதி பதவி ஏற்பது ஏன்?? பாஜகவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த டி கே எஸ்
திரைப்படத்தில் நடிக்க மாட்டேன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, வாரிசு அரசியல் தொடர்பான விமர்சனங்களுக்கு எனது செயலால் பதில் சொல்லுவேன் என தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு துறை ஒதுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே தனது லட்சியம்.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். கமல் தயாரிப்பில் , நான் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது. தற்போது நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
உதயநிதி ஸ்டாலின் எனும் நான்.. கெத்தாக தமிழக அமைச்சராக பதவியேற்று கொண்டார்..!