நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ட்ரெயிலர் தான்.! பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியாச்சு- உதயநிதி

By Ajmal Khan  |  First Published May 14, 2023, 10:51 AM IST

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உதயநிதி, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கர்நாடக- பாஜக தோல்வி

நாடு முழுவதும் அசூர பலத்தில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவது வாய்ப்பில்லையென்ற நிலை தான் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் நீடித்து வந்தது. எந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசியாக பஞ்சாப் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் பாஜகவை வீழ்த்தியது. இதனையடுத்து தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகம். எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக களம் இறங்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதை நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டது.

Latest Videos

undefined

கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி..! பொறுப்பாளர் அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு டுவிட்

135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ்

குறிப்பாக. இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட அம்சங்கள் பாஜகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதல் பாஜகவை விட காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. இறுதியாக காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத்…

— Udhay (@Udhaystalin)

 

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்

இந்தநிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மீண்டும் தலை தூக்கும் கள்ளச்சாராயம்.! 3 பேர் பலி.! திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்- இபிஎஸ் ஆவேசம்

click me!