அப்பப்பா.. கருணாநிதியையே தூக்கி சாப்பிட்ட உதயநிதி.. பேசி மயக்குவதில் தாத்தாவையே விஞ்சும் ஜித்தன்.

Published : Jun 25, 2021, 09:28 AM IST
அப்பப்பா.. கருணாநிதியையே தூக்கி சாப்பிட்ட உதயநிதி.. பேசி மயக்குவதில் தாத்தாவையே விஞ்சும் ஜித்தன்.

சுருக்கம்

திருநங்கைகளுக்கு என்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்காகவே எங்களுடைய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும்.

திருநங்கைகளுக்கு உதவி செய்ய திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதிலிருந்து அடிக்கடி தனது தொகுதிமக்களை வீடு வீடாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் பணிகளில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சீனியர் உறுப்பினர்களே மனம் திறந்து பாராட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்துவருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள திருநங்களைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதயநிதி அடையாள அட்டை வழங்கினார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது: 

சேப்பாக்கம் தொகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு 100 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து வற்புறுத்தி இந்த அடையாள அட்டை  கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க கூடிய நிகழ்வு கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட நடைபெறவில்லை.இதுதான் முதல் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சி இனி தொடர்ச்சியாக நடைபெறும். எங்கள் சட்ட மன்ற அலுவலகத்தின் கதவுகள் என்றும் தங்களுக்கு உதவி செய்யவதற்க்காக திறந்தே இருக்கும்.

திருநங்கைகளுக்கு என்று எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்காகவே எங்களுடைய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். அடையாள அட்டை வழங்குவதற்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது உதய நிதியின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த திருநங்கைகள் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். கலைஞர் பேரன்னா சும்மாவா என பலரும் உதயை மெச்சிக்கோண்டனர். 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!