உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்..! திமுக கூட்டத்தில் தீர்மானம் போட்ட அமைச்சர்

By Ajmal KhanFirst Published May 30, 2022, 12:44 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சர் பொறுப்பு ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற  திமுக ஆலோசனை  கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக வெற்றியில் உதயநிதி

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து சுமார் 8 ஆண்டுகள் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தது. தோல்வி விரக்தியில் திமுக தொண்டர்கள் இருந்த நிலையில்  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கூறப்பட்டது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக பரிசி அளிக்கும் வகையில் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு  வெற்றியை உறுதிபடுத்தினார். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மக்களுக்கு விளங்கும் வகையில் ஒற்றை செங்கலை காண்பித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனையடுத்து திமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. அப்போதே உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் அதற்க்கான வாய்ப்பு அப்போது உருவாகவில்லை

திருச்சி மாவட்ட திமுக கூட்டம்

இந்தநிலையில் விரைவில் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது. இதற்க்கு ஏற்றார் போல் தான் நடிக்கும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என உதயநிதி கூறியிருந்தார். இந்தநிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்,  திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று  நடைபெற்றது.  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக  பொறுப்பாளருமான,  அன்பில் மகேஸ்  பொய்யாமொழி  தலைமையில்  ஜூன் - 3ம் தேதி  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்தும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் ,என். கோவிந்தராஜன்,  மற்றும் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் வெகு விரைவில் அமைச்சராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!