மதச்சார்பின்மையின் மறு உருவம் எஸ்ஐஇடி கல்லூரி.. புகழாரம் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..

By Thanalakshmi VFirst Published May 30, 2022, 11:37 AM IST
Highlights

மதச்சார்பின்மையின் மறு உருவமாக நீதிபதி பஷீர் அகமது சயீத் கல்லூரி திகழ்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அஹமது சயீத் மகளிர் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய குழுவால் A++ தகுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நடைப்பெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேசிய தர் நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட சான்றிதழை S.I.E.T ( Southern india education trust ) தலைவர் மூஸா ராஸாவிடம் வழங்கினார். 

பின்னர் சிறப்புரையாற்றிய  முதலமைச்சர் ஸ்டாலின்,  தமிழ்நாட்டில் ஆண்களுக்கு பல கல்லூரிகள் இருந்த நேரத்தில் பெண்களுக்கு தனி கல்லூரி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்லூரி துவங்கப்பட்டதாக கூறினார்.  
1955 ஆம் ஆண்டு 155 மாணவிகளுடன் துவங்கப்பட்ட கல்லூரியில் தற்போது 7000 க்கும் அதிகமான மாணவிகள் பயில்வதாக கூறினார்.

இதனிடையே தற்போது வழங்கப்பட்டுள்ள தரச்சான்று கல்லூரியின் சேவைக்கு கிடைத்த முக்கியமான மைல் கல் எனவும், இது கல்லூரி நிறுவுனர் பஷீர் அகமது, தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். கல்லூரியில் 50% இஸ்லாமிய மாணவிகளும் மீதமுள்ள 50% பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவிகளும் பயின்று வருகின்றனர். 

மதச்சார்பின்மையின் மறு உருவமாக கல்லூரி திகழ்வதாகவும், அனைத்து பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபடும் கல்லூரி என புகழாரம் சூட்டினார். இஸ்லாமிய பெண்கள் மட்டுமில்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இந்த கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது. மதசார்பின்மையின் மறு உருவமாக எல்.ஐ.இ.டி கல்லூரி இருக்கிறது. 

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்க்கல்விக்கு சென்றால் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலம் உயர்க்கல்வியில் பெண்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காக தான் சுய உதவிக்குழு திட்டம் கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: கோயில்களை சீரமைத்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி புகார்..! பாஜக ஆதரவாளர் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்

click me!