மோடி மீது கொலைவெறி.. உதயநிதி துடுக்கு பேச்சு.. தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பரபரப்பு புகார்.

Published : Apr 02, 2021, 11:10 AM IST
மோடி மீது கொலைவெறி.. உதயநிதி துடுக்கு பேச்சு.. தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பரபரப்பு புகார்.

சுருக்கம்

அதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசுகையில் ஒரு சில பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்களிடையே காட்டி இது என்ன நோட்டு என்று தெரிகிறதா இது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு, இதை நான் ஏன் வைத்திருக்கிறேன் தெரியுமா? 

பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை பார்க்கும்போதெல்லாம் மோடி மீது கொலைவெறி வரவேண்டும் என்பதற்காகவே இதை பத்திரமாக வைத்திருக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு எதிராக அவர் மீது  அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அதிமுக வழக்கறிஞர் ரமேஷ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  31-3-2021 ஆம் தேதி அன்று, காங்கேயம் சட்டமன்ற திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசுகையில் ஒரு சில பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்களிடையே காட்டி இது என்ன நோட்டு என்று தெரிகிறதா இது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு, இதை நான் ஏன் வைத்திருக்கிறேன் தெரியுமா? இவை பார்க்கும்போதெல்லாம் மோடியின் மீது கொலைவெறி வரும் எனக் கூறினார். அவரின் இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுடன், வன்முறையை தூண்டும் வகையில், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும், பிரதமரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும்  உள்ளது. அவர் இவ்வாறு பேசியிருப்பது, தடை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்கள் மத்தியில் காட்டி அதை பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருப்பது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான குற்றம்.

அது குற்றம் என்று தெரிந்திருந்தும் அவர் பழைய ரூபாய் நோட்டை கைவசம் வைத்துள்ளார். அவர் பேசியது தொடர்பான காணொளி தகவல் தொழில்நுட்பத்தை தவறாக  பயன்படுத்தி சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுவருகிறது. அத்துடன் பிரதமர் மோடியை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியது, அவர் மீது கொலைவெறி இருப்பதாக கூறியிருப்பது அச்சத்தையும் பதற்றத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி