#BREAKING மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை... சபரீசனின் நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை..!

Published : Apr 02, 2021, 10:33 AM ISTUpdated : Apr 02, 2021, 10:34 AM IST
#BREAKING மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை... சபரீசனின் நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை..!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருவான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருவான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  தேர்தலுக்கு இன்னும் 3 நாள்கள் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வீடுகளில் சமீப காலமாக இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

குறிப்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக்(அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு