சகாயம் சொன்ன ஷாக் நியூஸ்... ரஜினியை பற்றி போட்டுடைத்த ரகசியம்..!

Published : Apr 02, 2021, 10:57 AM IST
சகாயம் சொன்ன ஷாக் நியூஸ்... ரஜினியை பற்றி போட்டுடைத்த ரகசியம்..!

சுருக்கம்

கட்சி ஆரம்பிப்பதாக கூறிய ரஜினி பின்னர் உடல்நலனை கருத்தில் கொண்டு பின் வாங்கி விட்டார். இந்நிலையில் சகாயம் தன்னை ரஜினி அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் சார்பாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் என்னை முதல்வராக பொறுப்பேற்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தன்னை அழைத்த ரகசியத்தை சகாயம் ஐஏஎஸ் தற்போது கூறி இருக்கிறார்.

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று சகாயம் ஐ.ஏ.எஸ் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். பின்னர் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார். ஆனால், சகாயம் போட்டியிடவில்லை. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ நடிகர் ரஜினிகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கட்சியில் சேர்ந்து என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதாக எங்களது அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்பவர் மூலம் அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் நான் அதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி.

சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிகளுக்குக்கூட சில லட்சங்கள் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. மருத்துவத் துறையில் இடமாறுதல்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டி சூழல் இருந்ததால் என்னுடைய கவனம் முழுக்க மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற சிந்தனையில் தான் இருந்தது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி ஆரம்பிப்பதாக கூறிய ரஜினி பின்னர் உடல்நலனை கருத்தில் கொண்டு பின் வாங்கி விட்டார். இந்நிலையில் சகாயம் தன்னை ரஜினி அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்