பெண்களை இழிவுபடுத்துகிறார் உதயநிதி.. பேப்பரை பார்த்து கூட உளறுகிறார் ஸ்டாலின்.. கேலி பேசும் காயத்திரி ரகுராம்.

Published : Jan 13, 2021, 11:23 AM IST
பெண்களை இழிவுபடுத்துகிறார் உதயநிதி.. பேப்பரை பார்த்து கூட உளறுகிறார் ஸ்டாலின்.. கேலி பேசும் காயத்திரி ரகுராம்.

சுருக்கம்

தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் பேப்பரை பார்த்து கூட சரியாக பேச முடியாமல் உளறி வருவதாகவும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை இலக்கிய பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரிரகுராம் குற்றச்சாட்டியுள்ளார்.   

தமிழகம் முழுவதும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு கல்விநிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் பொங்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை இலக்கிய பிரிவு தலைவருமான  காயத்ரிரகுராம் கலந்துகொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் பேப்பரை பார்த்து கூட சரியாக பேச முடியாமல் உளறி வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை திமுகவினர் அடித்து வெளியேறியதாகவும் அந்த பெண் எதிர்க்கட்சியை சார்ந்ததாகவே இருந்தாலும் மக்கள் பிரதிநிதியான ஸ்டாலின் அப்பெண்ணின் கேள்விக்கு பதில் அளித்து இருக்க வேண்டுமே தவிர அவரை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என்றும் இப்படிப்பட்ட ஸ்டாலினை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும்  பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!