உதயநிதியின் மொத்த குடும்பமும் பிளேபாய் குடும்பம்தான்..!! அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு கிண்டல்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2020, 5:34 PM IST
Highlights

நான் உதயநிதி ஸ்டாலினை ஸ்வீட் பாய் என்ற அர்த்தத்தில்தான் சாக்லேட் பாய் என கூறினேன்,ஆனால் அதற்கு அவர் என்னை பிளேபாய் என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார்

நான் பிளேபாய் என்றால், உதயநிதி ஸ்டாலினின் மொத்த குடும்பமும்  பிளேபாய் குடும்பம்தான் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். மேலும்  உதயநிதியை சுவிட்பாய் என்ற அர்த்தத்தில்தான் நான் சாக்லெட் என்றேன் எனவும் அவர்  விளக்கும் அளித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது. சில நேரங்களில் அது சூடாகவும் பல நேரங்களில் சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் எதைச் செய்தாலும் அதை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்வதும், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுப்பதுமாக இருவருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், உதயநிதி, நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என கூறினார். 

உடனே அதை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் என்பது ஒரு கடல் மாதிரி, அதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் குதிக்கலாம். ஆனால் அதில் குதித்து கரைசேர்ந்த இயக்கம் அதிமுக, எனவே எத்தனை உதயநிதிகள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் அதிமுகவுக்கு உள்ளது. என உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் திமுக எம்எல்ஏக்களில் ஒருவரான கு.க செல்வம், திடீரென பாஜக பக்கம் சாய்ந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த உதயநிதி, கு.க செல்வத்தை சாக்லெட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என கூறினார். இந்நிலையில் உதயநிதியின் கருத்தை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்கு தான் தெரியும் என கிண்டல் செய்தார். பின்னர் அதற்கு பதில் கொடுத்த உதயநிதி சாக்லெட் பாய் என்பது தவறான வார்த்தை அல்ல, அது நம்மை புகழும் சொல்தான்.  என்னை சாக்லேட் பாய் என்று சொன்னவர் ஒரு பிளேபாய் என பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிட்ட  அமைச்சர் ஜெயக்குமார்,   பின்னர் அங்குசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது எனக் கூறினார். மேலும், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சியின் செயற்குழு முடிவு எடுக்கும் என்றும், தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறினார். மேலும் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மட்டுமே போட்டியெனவும், பாஜக தலைமையில்தான் கூட்டணி  உருவாகும் எனவும் கருத்து கூறி இருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், துரைசாமியின் கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என பதிலளித்தார். 

அப்போது ஒரு செய்தியாளர் ஒருவர், உதயநிதி ப்ளேபாய் என கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார். நான் உதயநிதி ஸ்டாலினை ஸ்வீட் பாய் என்ற அர்த்தத்தில்தான் சாக்லேட் பாய் என கூறினேன்,ஆனால் அதற்கு அவர் என்னை பிளேபாய் என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். அப்படிப் பார்த்தால் அவர்கள் குடும்பமே பிளேபாய் குடும்பம்தான், என அமைச்சர் உதயநிதியை கிண்டலடித்துள்ளார். உதயநிதிக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும்  இடையேயான வார்த்தைப் போர் திமுக-அதிமுக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
 

click me!