எஸ்.வி சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதை அதிமுக அரசு செய்யும்...!! அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2020, 5:04 PM IST
Highlights

 நடிகர் எஸ்வி சேகர், சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை அவமதித்திக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் சிறைக்கு செல்லும் அவரின் ஆசையை அதிமுக அரசு நிறைவேற்றும்.

சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து துரிதமான முறையில் செயல்பட்டு மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக குறைத்து வருவதாகவும் ராயபுரத்தில் மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27% ஆக இருந்த நோய் தாக்கம் தற்போது 7% மாக குறைந்து உள்ளதாக தகவல் தெரிவித்தார். 

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் நலன் கருதி, கட்சி எடுக்கக்கூடிய முடிவு என்று தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு முடிவெடுக்கும் என்றும் தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக விற்கும் திமுகவுக்கும் பெரும் போட்டி நிலவும் என்றும் பாஜக தலைமையிலேயே கூட்டணி உருவாகும் என்றும் பாஜகவின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்க்கு பதில் அளித்த அமைச்சர், கூட்டணி குறித்து வி.பி துரைசாமி கூறியதை பா.ஜ.கவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

.உதயநிதி ஸ்டாலினின் "பிளேபாய்" கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நான் உதயநிதி ஸ்டாலினை "ஸ்வீட்பாய்" என்ற அர்த்தத்தில் "சாக்லேட் பாய்" எனக் கூறினேன். அதற்கு அவர் என்னை "பிளேபாய்" என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். அப்படிப் பார்த்தால் "அவர்கள் குடும்பமே பிளேபாய்" குடும்பம்தான் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார். அதிமுக கட்சி கொடியில் அண்ணாவின் உருவப் படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளித்த அமைச்சர், நடிகர் எஸ்வி சேகர், சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை அவமதித்திக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் சிறைக்கு செல்லும் அவரின் ஆசையை அதிமுக அரசு நிறைவேற்றும் என்று பதில் அளித்தார்.
 

click me!