முதல்ல அந்த போட்டோவ எடுங்க..! சேகர் பாபுவை மிரள வைத்த உதயநிதி..!

Published : Nov 14, 2019, 10:40 AM IST
முதல்ல அந்த போட்டோவ எடுங்க..! சேகர் பாபுவை மிரள வைத்த உதயநிதி..!

சுருக்கம்

வட சென்னை தொகுதியின் எம்பியான கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் தொகுதியில் தனக்கான தொகுதி அலுவலக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். தற்போது எம்பிக்கள் தங்கள் தொகுதி அலுவலகத்தை உதயநிதியை வைத்து தான் திறக்க வேண்டும் என்று மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னையில் நேற்று நடைபெற்ற வட சென்னை எம்பி அலுவலக திறப்பு விழாவில் உதயநிதி போட்ட உத்தரவு கட்சிக்காரர்களை கலகலக்க வைத்தது.

வட சென்னை தொகுதியின் எம்பியான கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் தொகுதியில் தனக்கான தொகுதி அலுவலக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். தற்போது எம்பிக்கள் தங்கள் தொகுதி அலுவலகத்தை உதயநிதியை வைத்து தான் திறக்க வேண்டும் என்று மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

தயாநிதி மாறனின் மத்திய சென்னை தொகுதி அலுவலகத்தை கூட இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதி தான் திறந்து வைத்திருந்தார். அதன்படி கலாநிதி வீராசாமியின் அலுவலகத்தை திறந்து வைக்க உதயநிதி சென்று இருந்தார். அந்த பகுதியின் மாவட்டச் செயலாளரான சேகர் பாபு இதற்காக தடல் புடல் ஏற்பாடு செய்திருந்தார்.

அனைத்து வரவேற்புகளும் முடிந்த நிலையில் ரிப்பன் வெட்டி உதயநிதி தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு உள்ளே சென்ற உதயநிதி ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகி நின்றார். உடனடியாக சேகர்பாபுவை அழைத்த அவர், ரகசியமாக அதே சமயம் சற்று கோபத்துடன் ஏதோ கூற விரைந்து சென்ற அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உதயநிதியின் புகைப்படத்தை வேகவேகமாக அகற்றினார்.

நிகழ்சசி முடிந்த பிறகு சேகர்பாபுவிடம் இது பற்றி கேட்ட போது, இரண்டு நாட்களுக்கு முன்னரே கட்சி அலுவலகங்களில் பெரியார்,. அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அதனை மறந்துவிட்டு கலாநிதி தனது அலுவலகத்தில் தலைவர்கள் வரிசையில் உதயநிதி படத்தை வைத்துவிட்டார்.

இதனால் தான் உடனடியாக அதை திறக்குமாறு தம்பி கூறினார். நான் செய்தேன் வேறு ஒன்றும் இல்லை என மிரட்சி குறையாமல் கூறி முடித்தார். தான் போட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று திறப்பு விழாவிலேயே உதயநிதி காட்டிய கடுமை அந்த இடத்தை சற்று நேரம் பரபரப்படைய வைத்தது உண்மை தான்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!